Sunday, September 8, 2024
Home » கொழும்பு உணவகமொன்றில் துரித உணவில் கரப்பான் பூச்சி

கொழும்பு உணவகமொன்றில் துரித உணவில் கரப்பான் பூச்சி

- உணவகத்தில் முறைப்பாடு செய்தும் பதில் வழங்கப்படவில்லை

by Prashahini
February 21, 2024 9:50 am 0 comment

கொழும்பு – புறநகர் பகுதியான இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுப் பொருளில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்ற நபர் சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.

எனினும், வாங்கிய சிற்றுண்டியில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை அவதானித்த அந்த நபர் குறித்த உணவகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என அந்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைய நாட்களாக உணவுப் பொருட்களில் உயிரிழந்த நிலையில் பூச்சி, பல்லி, புளு, எலி மற்றும் தவளை இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லி

யாழில் தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x