Tuesday, June 25, 2024
Home » ஜானக வக்கும்புர சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம்

ஜானக வக்கும்புர சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம்

by Rizwan Segu Mohideen
February 20, 2024 6:24 pm 0 comment

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் அமைச்சரவை அமைச்சுப் பதவியை இதற்கு முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்ல வகித்திருந்ததோடு, அவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவ்வமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சுற்றாடல் துறையின் இராஜாங்க அமைச்சு ஜானக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT