Saturday, May 25, 2024
Home » அங்கஜன் எம்.பியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்

அங்கஜன் எம்.பியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்

by sachintha
February 20, 2024 12:43 pm 0 comment

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்- பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தென்மராட்சிலுள்ள இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தாவளை இயற்றாலை விளையாட்டுக் கழகம் மற்றும் வரணி வடக்கு யாழ். ஒளி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கே இவ்வாறு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் மேற்படி உதவித்திட்டத்தை கையளித்திருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT