சிறை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
கூட்டணி அரசு ஒன்றுக்கு இணக்கம் எட்டப்பட்டிருக்கும் தனது போட்டியாளர்களுக்கு எதிராக இம்ரான் கானின் வேட்பாளர் பாராளுன்றத்தில் போட்டியிடவுள்ளார்.
கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் அதிக ஆசனங்களை வென்றபோதும் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களை கைப்பற்றவில்லை.
இதனால் எதிர்வரும் பெப்ரவரி 29 ஆம் திகதி அரசொன்றை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. எனினும் பொதுத் தேர்தலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளருடன் இம்ரான் கானின் வேட்பாளர் போட்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளது.