சம்மில் ஜயனெத்தி எழுதிய ‘காலய அவகாசய துல மாக்ஸ்வாதய’ (காலத்துடன் மார்க்சிசம்) எனும் நூல் மற்றும் ‘கார்ல் மாக்ஸ் ஆசர்ய உபாதி நிபன்தனய’ (கார்ல் மார்க்ஸ் கலாநிதிப் பட்ட ஆய்வறிக்கை) மொழி பெயர்ப்பு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், எதிர்வரும் 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் உள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு, மார்க்சிசம் குறித்து பல நூல்களை எழுதியுள்ள, மார்க்சிசம் பற்றிய விவாதத்தில் தனி ஆர்வம் கொண்ட இளைஞரே இதனை எழுதிய நூலாசிரியர் ஆவார். அவர் சோசலிச மக்கள் மன்றத்தின் நான்காவது சர்வதேச இலங்கைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
குறித்த இரண்டு படைப்புகளின் சமர்ப்பணத்தையும் சோசலிச மக்கள் மன்றத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலியினால் முன்னெடுக்கப்படவுள்ளது.