ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி மற்றும் கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வா ஆகியோரே இவ்வாறு இணைந்துள்ளனர்.
நேற்றையதினம் (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்திற்கு 100 ஆவது கட்ட ஸ்மாரட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் வைபவத்தின் போதே இருவரும் இவ்வாறு இணைந்து கொண்டனர்.