266
கட்டுகெலியாவ அல் மனார் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விஜிதபுர டப்ளியூ.சீ.சீ. அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறன்று (11) கடாண்டுகம பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலாவெவ டப்ளியூ.எஸ்.சீ. அணியை எதிர்கொண்ட விஜிதபுர டப்ளியூ.சீ.சீ. அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்ட வீரர் ஆகிய விருதுகளை விஜிதபுர அணியின் அகில சந்தருவன் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக எம்.எஸ்.கே. அணியின் சபீக் தெரிவு செய்யப்பட்டார்.
கல்நேவ தினகரன் விசேட நிருபர்