Thursday, July 25, 2024
Home » சகல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்

சகல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

தமிழ் – சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன.இதனால் சாதாரண மக்களால் அந்த சுமையை சுமக்க முடியாத நிலை காணப்படுகிறது.  இதை கவனத்திற்கொண்டே  இது தொடர்பில் அரசாங்கம் கவனம்   செலுத்தியுள்ளது.

அந்த வகையில் அமைச்சரவையிலும்  இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பெருமளவு இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கி அல்லது அந்த வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சரவையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு இணங்க எதிர்காலத்தில் மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும் இனி விலை அதிகரிப்பு ஏற்படாது.  இதற்கு மாறாக விலைக் குறைப்பே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT