72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ. 35,000 கொடுப்பனவு கோரி நேற்று (13) மு.ப. 6.30 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த கொடுப்பனவை ஏனைய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு தெரிவித்து, குறித்த அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக (14) தொடர்ந்த பணிப்புறக்கணிப்பை அடுத்து, தற்போது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமமான கொடுப்பனவு கோரி 72 சுகாதார ஊழியர் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்
சுகாதாரத் துறை வேலைநிறுத்தம்; மீண்டும் இலங்கை இராணுவம் பணியில்
சுகாதாரத்துறை பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் பெரும் அசௌகரியம்