Sunday, October 13, 2024
Home » சமமான கொடுப்பனவு கோரி 72 சுகாதார ஊழியர் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

சமமான கொடுப்பனவு கோரி 72 சுகாதார ஊழியர் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

- நேற்றைய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை

by Rizwan Segu Mohideen
February 13, 2024 8:04 am 0 comment

மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ. 35,000 கொடுப்பனவு கோரி இன்று (13) மு.ப. 6.30 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் (12) திங்கட்கிழமை நிதியமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக, சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த கொடுப்பனவை ஏனைய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு தெரிவித்து, குறித்த அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒரு சாரருக்கு சார்பான அணுகுமுறையால் அதிருப்தி அடைந்த தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னதாக கடந்த பெப்ரவரி 01ஆஅம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்த நிலையில் 48 மணி நேர போராட்டத்தைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக அதனை கைவிட தீர்மானித்திருந்ன.

அந்த வகையில், இது நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் சங்கங்களுடன் நேற்றைய (12) கலந்துரையாடலுக்கு வழிவகுத்தது.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாததால், தற்போதைய வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவைகளில் இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இதற்கு முன்னதாக செயற்படுத்தப்பட்ட வகையில், அத்தியாவசிய சேவைகளை பேணும் நோக்கில் இராணுவ வீரர்களை பணியில் அமர்மத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; மீண்டும் இலங்கை இராணுவம் பணியில்

மருத்துவர்களுக்கான ரூ. 35,000 கொடுப்பனவு ரூ. 70,000 ஆக அதிகரிப்பு

பெப்ரவரியில் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

72 சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர் நிர்க்கதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x