Wednesday, October 9, 2024
Home » காசாவில் மூன்றில் இரண்டு நிலப்பகுதி மக்கள் பாதிப்பு
இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு:

காசாவில் மூன்றில் இரண்டு நிலப்பகுதி மக்கள் பாதிப்பு

by mahesh
February 7, 2024 3:19 pm 0 comment

காசாவில் இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு அந்தப் பகுதியின் மூன்றில் இரண்டு நிலப்பகுதி அல்லது 246 சதுர கிலோமீற்றர் பகுதியை உள்ளடக்கி இருப்பதாக ஐ.நா மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பகுதி் 1.78 மில்லியன் பலஸ்தீனர்கள் அல்லது காசா மக்கள் தொகையில் 77 வீதத்தினர் வசிக்கும் பகுதியாக உள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தெற்கின் கான் யூனிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி வரை விரிவுபடுத்தப்பட்டிருக்கும் சூழலில் அந்தப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பகுதிகள் முன்னர் இஸ்ரேல் இராணுவத்தால் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து தமது வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் குறிப்பிட்டது.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தற்போது எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x