Home » ஹமீட் அல் ஹுசைனி 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup

ஹமீட் அல் ஹுசைனி 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup

by Rizwan Segu Mohideen
February 6, 2024 6:34 pm 0 comment

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 80 ஆம் வருட குழுமத்தினரால் நடத்தப்பட்ட 14 ஆவது பாடசாலைகளுக்கிடையிலான Oxford Presidents Cup – 2024 Challenge Trophy இன் ஆரம்ப விழா கடந்த சனிக்கிழமை (03) கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் வாத்திய அணியின் கண்கவர் அணிவகுப்புடன் ஆரம்பமான வர்ணமயமான நிகழ்வில் இருபது பாடசாலைகள் பங்குபற்றியதோடு, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்வானது பிரதம அதிதி கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

Oxford Group குழுமத்தின் தலைவர் இம்தியாஸ் பாரூக், குழுமத்தின் பணிப்பாளரும் Marin Grill & M Burger உணவகங்களின் நிறுவுனருமான ஹிபாஸ் பாரூக் ஆகியோரினால் கிண்ணம் உத்தியோகபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டது.

“NIVIA” உத்தியோகபூர்வ பந்து கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பிரபல வர்த்தகர்களான அல் ஹாஜ் எச்.எம்.எம். ஹனீபா, அல் ஹாஜ் காதர் முகையதீன் நூஹ் ஆகியோரினால் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x