Tuesday, October 15, 2024
Home » காணி உரிமை வழங்கும் உருமய தேசிய செயலகம் திறந்து வைப்பு

காணி உரிமை வழங்கும் உருமய தேசிய செயலகம் திறந்து வைப்பு

- மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் தேசிய நிகழ்ச்சி

by Rizwan Segu Mohideen
February 2, 2024 11:36 am 0 comment

உருமய தேசிய நிகழ்ச்சித் திட்ட செயற்பாட்டு செயலகம் நேற்று (01) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சதாம் வீதியில் உள்ள பழைய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உருமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்பட்டு அவற்றை பயன்டுத்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வழிநடத்தல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் “உருமய ” தேசிய செயற்பாட்டு செயலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மானியப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பதிவு செய்வதற்கும் உருமய தேசிய செயற்பாட்டுச் செயலக அலுவலகத்தை 0114354600-1 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது http://tinyurl.com/yb98yhey என்ற இலத்திரனியல் படிவத்தின் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.பி. ஹேரத், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்திரா ஹேரத், ஜனாதிபதி அலுவலகத்தின் சமூக சேவைகள் பணிப்பாளர் பிரியந்த குமார, காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க, நில அளவையாளர் டபிள்யூ.எஸ்.எல்.சி பெரேரா, பதிவாளர் நாயகம் நளீன் சமந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘உரித்து’ வேலைத்திட்டம்: 10,000 குடும்பங்களுக்கு காணி உறுதிகள்

10,000 பேருக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரம்

விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அவர்களுக்கு அளிக்கும் கௌரவம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x