Monday, July 15, 2024
Home » ஆயுதங்களுடன் வாகனத்தில் பயணித்த இருவர் சந்தேகத்தில் கைது

ஆயுதங்களுடன் வாகனத்தில் பயணித்த இருவர் சந்தேகத்தில் கைது

by Gayan Abeykoon
February 1, 2024 9:53 am 0 comment

கொலை செய்யும் நோக்கில் ரீ 56 துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வாகனத்தில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை களுத்துறை பொலிஸ் பிரிவின்  ஊழல் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தெல்கொட வீரப்பன் மற்றும் பாஜா என்ற புனைப் பெயர்களில் அடையாளப்படுத்தப்படும் 46 மற்றும்  29 வயது நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். யுக்திய பொலிஸ் நடவடிக்கைக்கு சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் தெல்கொடவிலிருந்து அங்குருவாதொட்ட  நோக்கிப் பயணித்த மோட்டார் வாகனமொன்றை நார்த்துபான பாலத்தடியில் பொலிசார் சோதனையிட்டபோதே ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை வாகனத்துடன் கைது செயத பொலிசார் வாள், கைக்குண்டு மற்றும் 11 கிராம் ஹெரொயின் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதான சந்தேக நபரின் வீட்டில்  மேற்கொண்ட சோதனையின்போது மேலும் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ. ராஜபக்ஷ,  பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் குமாரவின் ஆலோசனையில் உப பொலிஸ் பரிசோதகர் நுவன் கோரலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT