Saturday, June 22, 2024
Home » வெற்றியைக் கொண்டாடும் சோப் அன்ட் அலைட் இன்டஸ்ட்ரீ

வெற்றியைக் கொண்டாடும் சோப் அன்ட் அலைட் இன்டஸ்ட்ரீ

by Gayan Abeykoon
February 1, 2024 1:24 pm 0 comment

கொழும்பு மெஷினரி அன்ட் இக்விப்மன்ட்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோப் அன்ட் அலைட் இன்டஸ்ட்ரீ (பிரைவட்) லிமிடட் நிறுவனம் இரசாயனம் மற்றும் மூலப்பொருள் சந்தையில் தொழில்துறை முன்னணியாளராக மாறுவது என்ற எளிமையான தொடக்கத்திலிருந்து தனது அசாதாரண பயணத்தை நினைவுகூரும் வகையில் 25 வருட நிறைவை பெருமையுடன் பூர்த்திசெய்துள்ளது.

25வருட வெற்றியை முன்னிட்டு நேர்த்தியான கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் ஓர் அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந் நிறுவனத்தின் பயணத்தில் நெஸ்லே, ஹேமாஸ், யுனிலிவர், கொகா-கோலா மற்றும் முன்னணியான பங்காளர்களான டெல்மேஜ், பசிலுர் டீ, ஐசிஎல் மார்க்கட்டிங், ரீஜே லங்கா உள்ளிட்ட மேலும் பலர் இணைந்திருந்தனர். இது வெறுமனே பாராட்டுக்களைத் தெரிவிக்கும் ஓர் இரவாக மாத்திரமன்றி, நிறுவனத்தின் பாதையில் ஒருங்கிணைந்திருந்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் இதயபூர்வமான இசை நிறைந்த இரவாக அமைந்தது.

SAIL இன் முதுகெலும்பாக விளங்கும் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் துபாய்க்கு சிறப்பு சுற்றுலாப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அர்ப்பணிப்பான குழு மீது நிறுவனம் கொண்டுள்ள அக்கறைக்கு சான்றாக இது அமைந்தது.

புதிய பயணத்தின் ஆரம்பத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை தொடர்பில் அனைவரும் ஆவலாகக் காத்திருந்தனர் – SAIL இன் புதிய சின்னம் வெளியிடப்பட்டது.

இந்த சின்னமானது, நிறுவனத்தின் வரலாற்றின் அழகான பிரதிநிதித்துவம், கடந்த கால கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது, ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கையான படியையும் குறிக்கும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT