முன்னணி சமூக நலன் பேண் சர்வோதய அமைப்பும், இலங்கையின் மாபெரும் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிறுவனமான Hatch இணைந்து, “GoviLab” விவசாய தொழில்நுட்ப ஊக்குவிப்பை அறிமுகம் செய்துள்ளன. இந்தியாவின் PwC இன் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம், பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் மையத்தின் ஆதரவுடன் இணைந்து முன்னெடுக்கும் தேசிய திட்டமான, இலங்கையின் உள்ளடக்கமான டிஜிட்டல் விவசாய மாற்றியமைப்பு மூலோபாயத்தின் (IDAT) உள்ளக அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இலங்கையின் விவசாயத் துறையில் காணப்படும் பிரதான சவால்களை இனங்கண்டு முன்னுரிமைப்படுத்துவதில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் கவனம் செலுத்துவதுடன், அதனூடாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சிறியளவிலான விவசாயிகளுக்கு டிஜிட்டல் மயப்படுத்தல் விவசாய சூழல் கட்டமைப்பினால் வலுவூட்டப்படுகின்றது. இது IDAT செயற்திட்டத்துக்கு பெருமளவு பங்களிப்புச் செலுத்தும்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்வது மாத்திரமன்றி, மொத்த சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் தொழில்புரியும் துறையாக அமைந்திருக்கின்ற போதிலும், மொத்த தேசிய உற்பத்தியில் அதன் பங்கு 10 சதவீதத்துக்கு குறைவாக அமைந்துள்ளது. வனஜீவராசிகள் மற்றும் போக்குவரத்து போன்ற வினைத்திறனற்ற காரணிகளால் 40சதவீதம் விரயமாகின்றதுடன், பல தரப்பினரிடையே கைமாறுவதால், நுகர்வோரை சென்றடையும் போது அசல் விலையை விட 4-5 மடங்கு வரை அதிகரிக்கும்.