எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில், இலங்கை கலால் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய திணைக்களத்தின் பேச்சாளர், கலால் பிரதி ஆணையாளர் (சட்ட /தகவல் தொழில்நுட்பம் /விநியோக சங்கிலி ஒழுங்குமுறை) சீ.ஜே. வீரக்கொடியினால் இது தொடர்பில் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த அறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெப்ரவரி 04ஆம் திகதி நாடு முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான கலால் திணைக்கள அனுமதிப்பத்திரம் கொண்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி 03 ஆம் திகதி சனிக்கிழமையன்று கலால் திணைக்கள அனுமதிப்பத்திரம் கொண்ட விற்பனைநிலையங்கள் மூடப்பட வேண்டிய நேரத்திலிருந்து, 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மேற்படி மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட்டுள்ளது.
Independence-Day-Liqour-Shop-Closing-Excise-Department