நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப ‘புதிய கூட்டணி’ உடன் ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி இணைந்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி) தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நாட்டை நேசிக்க கூடிய பொது மக்களின் பூரண ஆதரவுடன் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ள அரசியல் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா,பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் அமைச்சர் நளின் பெனாண்டோ ஆகியோரின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய கூட்டணியில் 30 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், இணைந்திருப்பதாக தெரிவித்தார்.
இதில் சுமார் 77 பாராளுமன்ற உறுப்பினர்கள், இணைந்து செயல்பட இருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் இந்தக் கூட்டணியை விஸ்தரிக்க அவர்களோடு சேர்ந்து ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி மும்முரமாக அரசியலில் இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டணியின் நோக்கம் குடும்ப அரசியல் இல்லாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதும் அந்தத் தலைமைத்துவம் நாட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கக் கூடிய ஒருவரை உருவாக்குவதாகும் என குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இந்தப் புதிய கூட்டணியில் இணைந்து பயணிக்க அதிகளவான அரசியல் பிரமுகர்கள், தமிழ் முஸ்லிம் சிவில் அமைப்புகள் தற்பொழுது கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக, ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி) தெரிவித்தார்.
சில மேதைகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கி நாட்டை வீழ்த்தினர்