– மகாவலி அபிவிருத்தி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை
ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனம் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் ஷசீந்திர ராஜபக்ஷ நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
காலஞ் சென்ற சனத் நிஷாந்த வகித்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சு வெற்றிடத்திற்கே ஷசீந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் கீழிருந்து மகாவலி அபிவிருத்தியானது, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லொஹான் ரத்வத்தவிற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.