Saturday, May 25, 2024
Home » தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்; முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்!

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்; முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்!

- நீதிமன்ற உத்தரவு பாதைகளில் பேரணி நடத்தவில்லை

by Rizwan Segu Mohideen
January 30, 2024 7:04 pm 0 comment

– விஹார மகாதேவி பூங்கா முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரை

தேரதல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் “மாற்றத்தை நாடும் வருடம்-2024” எனும் தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரணியைத் தொடர்ந்து, கொழும்பு விஹார மகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆற்றிய உரை வருமாறு,

எங்களிடம் டீல் இல்லை. நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்த பாதைகளில் நாங்கள் பேரணி நடத்தவில்லை. நாம் சட்டத்தை மீறி செயற்படவில்லை. வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம், எமக்குத் தேர்தலே வேண்டும்.

அரசியல் ரீதியிலான டீல்கள் மூலம் அன்றி மக்கள் அனுமதியுடனயே ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆசிர்வாத்தின் ஊடாகவே நாம் ஆட்சிக்கு வருவோம் என்பதை இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்திடம் கூறுகிறோம்.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்கள் வெள்ளத்திற்கு பயந்து விட்டனர். இது கோழைத்தனமான அரசாங்கமாகும். இது முதுகெலும்பு இல்லாத அரசாங்கம். மக்களுக்கு பயந்த அரசாங்கம், இன்று காலை ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் சில கைபொம்பைகள் நீதிமன்றம் சென்று, சில பிரதேசங்களுக்கு தடையுத்தரவுகளை கோரினர். ஆனால் நாங்கள் பேரணி சென்றது, சட்டத்தை மீறியல்ல. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அல்ல. நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இவ்விடத்திற்கு ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகளை,
வேண்டுமேன்றே மீறினர். ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் முதுகெலும்பு இருந்தால் மக்கள் மத்தியில் வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

ரணில்-ராஜபக்ச அரசாங்கம் கண்ணீர் புகையை கொண்டு தாக்குதல் நடத்தினர். ஆனால் நாங்கள் தாக்குதல் நடத்துவது வெடி குண்டு, வாள், மெஷின் கன் துப்பாக்கி மூலம் அல்ல. தேர்தல் ஊடாக நாம் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். இதுதான் அரச பயங்கரவாத்தின் அடையாளமாகும். அடக்குமுறை, மிலேச்சத்தனம் மூலம் அரசாங்கம் மக்களை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. எனவே இந்த மோசமான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப 220 இலட்சம் மக்கள் தயாராகுங்கள். நாங்கள் ரணிலுடனோ ராஜபக்சவுடனோ டீல் இல்லை. மேடையில் எதிராக பேசிவிட்டு இரவில் டீல் போடும் இரட்டை நிலைப்பாட்டையுடைய அணியல்ல ஐக்கிய மக்கள் சக்தி.

நாட்டை வங்குரோத்தடைய செய்த கும்பலை எமது ஆட்சியில் சட்டத்திற்கு கொண்டுவந்து நீதிமன்றத்தின் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதற்கு தயாராகுங்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் மன்றம் மற்றும் சட்டத்தரணிகள் தாக்கல் அடிப்படை உரிமை மனு ஊடாக நாட்டை வங்குரோத்து அடைவதற்கு ராஜபக்ச குடும்பமும் ஒரு சில அதிகாரிகளுமே பொறுப்பு என தீர்ப்பளித்தது. அரச அதிகாரத்தை பெற முன்னர் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே இந்த தீர்ப்பை பெற்றோம். இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்களிடம் இருந்து இழப்பீட்டை பெற்று உயிரிழந்த, பதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். ஆட்சியை விரட்டியடிக்கும் இந்த ஆரம்ப பயணத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சட்டவிரோதமானது. போராடுவதற்கு அரசியலமைப்பில் எமக்கு உரிமை உள்ளது. வெட்கம்! வெட்கம்! ரணில் ராஜபக்ச அரசாங்கமே வெட்ககேடு. அத்துடன் ஜனாதிபதி உட்பட அனைத்து மாளிகைகளையும் தகவல் தொழில்நுட்ப பல்கலைகழகமாக மாற்றுவோம் என்றார்.

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT