பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகளை கொள்வனவு செய்ய வழங்கப்பட்ட பாடசாலை காலணி வவுச்சர்களில் செல்லுபடியாகும் காலம், 2024 பெப்ரவரி 01ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் அதன் செல்லுபடியாகும் காலத்தை 2024 பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீடிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தை காலணி விநியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறியத் தருவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெற்று வருவதாக பாடசாலைகளுக்கு பெப்ரவரி 01ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இதில் விவசாய விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருந்தது.
குறித்த விவசாய விஞ்ஞான பரீட்சை பெப்ரவரி 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.