வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தொன்றின் சாரதி, நடத்துநருக்கும், தனியார் பேருந்தொன்றின் சாரதி, நடத்துநருக்கும் இடையில் இக்கைலப்பு இடம்பெற்றதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் தரித்து நின்றன. இதன்போது இவ்விரு பேருந்துகளின் ஊழியர்களுக்கிடையில் நேர அட்டவணை தொடர்பாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், இ.போ.ச. பேருந்தின் மின்விளக்கு உடைக்கப்பட்டது. இவர்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகளின் இரு சாரதிகளும் இரு நடத்துநர்களும் காயமடைந்தனர்.
(வவுனியா விசேட நிருபர்)வவுனியாவில் தனியார், இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்களுக்கிடையே கைகலப்பு
நால்வர் வைத்தியசாலையில்
238
previous post