Sunday, May 26, 2024
Home » பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை

பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை

- காரில் வந்த நால்வர் T56 துப்பாக்கியால் சூடு

by Rizwan Segu Mohideen
January 23, 2024 2:19 pm 0 comment

பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT