917
ஆப்பில் நிறுவனத்தின் ஐபோன் முதன்முறையாக உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கைபேசியாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு 234.6 மில்லியன் ஐபோன் கைபேசிகள் விற்கப்பட்டதாக சர்வதேச தரவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 12 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த சம்சுங் நிறுவனத்தை அது பின்னுக்குத் தள்ளியது. சம்சுங் கடந்த ஆண்டு 226.6 மில்லியன் கைபேசிகளை விற்றுள்ளது. சம்சுங் போன்று ஹூவாவி, கூகுள், சியோமி போன்ற பல நிறுவனங்கள் அன்ட்ரோயிட் செயலியை பயன்படுத்துவதால் சம்சுங் நிறுவனத்திற்கு கடும் போட்டி இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.