HNB பொது காப்புறுதி ஆனது (General Insurance – HNBGI), தனது டிஜிட்டல் உருமாற்றத்தை விரைவுபடுத்தும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, உலகத் தரம் வாய்ந்த Core Insurance System கட்டமைப்பை செயற்படுத்த, Azentio Software நிறுவனத்துடன் இணைந்து Project Phoenix எனும் உருமாற்ற முயற்சியின் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இந்த இலட்சியத் திட்டமானது, HNBGI இன் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் குறிப்பிடும்படியான மைல்கல்லைக் காண்பிப்பதோடு, இதன் மூலம் தனது பங்குதாரர்களுக்கு இணையற்ற மதிப்பை உறுதியளிக்கிறது.
Project Phoenix திட்டமானது, செயற்றிறன், துல்லியம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் HNBGI இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதன் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் நிறுவனம் பயனளிக்கிறது. HNBGI இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) சித்துமின ஜயசுந்தர இது பற்றித் தெரிவிக்கையில், “புத்தாக்கங்களின் மூலம் நிலைபேறான பெறுமதியை உருவாக்கும் எமது நோக்கத்துடன் இந்த திட்டம் அமைகின்றது. Project Phoenix மூலம் கொண்டுவரப்படும் மேம்படுத்தல் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியன, வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் எமது போட்டித்திறன், செயற்பாட்டுத் திறன், துல்லியம், சுறுசுறுப்பு ஆகியவற்றை அதிகரித்து, புதிய உயரத்திற்கு எம்மைக் கொண்டு செல்லும். இது, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு உறுதியளிக்கிறது.” என்றார்.
இந்த மாற்றத்தக்க பயணத்தில், HNBGI இன் நம்பகமான பங்குதாரராக, சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட முன்னணி வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி (BFSI) மென்பொருள் நிறுவனமான Azentio Software காணப்படுகின்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள 130 இற்கும் அதிக காப்புறுதியாளர்கள் உள்ளிட்ட, 65 நாடுகளில் 1,000 இற்கும் அதிக காப்புறுதியாளர்களுக்கு Azentio சேவை வழங்குகிறது. Azentio ONEInsurance இயங்குதளமானது, திறமையான, இணக்கமான, பாதுகாப்பான அம்சங்களை ஒன்று சேர்த்து, தனித்துவமான, உறுதியான புதிய காப்புறுதித் தயாரிப்புகளை விரைவாக ஆரம்பிக்கவும், வேகமாக வழங்கவும், டிஜிட்டல் முறையில் இணையவும், வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் நிறுவனமாக மாற அனுமதிக்கிறது.
Azentio Software நிறுவனத்தின் BFSI பிரதித் தலைவர் ஜதிந்தர் பேடி இது பற்றி தெரிவிக்கையில், “Project Phoenix திட்டத்திற்காக HNBGI உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமை அடைகிறோம். மிக உயர்வான, உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் அதி நவீன காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் எமது நிபுணத்துவம் காணப்படுகின்றது. இந்த மாற்றமுறும் பயணத்தில் HNBGI ஐ ஆதரிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.
Project Phoenix வெறுமனே தொழில்நுட்ப முன்னேற்றத்தை மாத்திரமன்றி, விரைவான தொழில்துறை மாற்றத்தின் வெளிப்பாட்டில் சிறந்து விளங்குவதற்கான ஒரு மூலோபாய அர்ப்பணிப்பை காட்டுகிறது. HNBGI தனது டிஜிட்டல் எதிர்காலத்தைத் தழுவிக்கொண்டிருப்பதால், உயர்மட்ட சேவைகளை வழங்குவதற்கும் நம்பகமான காப்புறுதி வழங்குநராக தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான அதன் அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது. இம்முயற்சி ஒரு புதிய கட்டமைப்பைச் செயற்படுத்துவது மட்டுமல்லாது, ஒரு பிரகாசமான, திறமையான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் திட்டமாகும்.
HNB பொது காப்புறுதி (HNBGI) ஆனது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாகனம், வாகனம் அல்லாத மற்றும் தக்காஃபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் அர்ப்பணிப்புள்ள பங்காளியாக செயற்படுகின்றது. HNB Assurance PLC இன் துணை நிறுவனமும், HNB குழுமத்தின் உறுப்பினருமான HNBGI ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதோடு, நாடு முழுவதும் விரிவான சேவை விரிவாக்கத்தை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited நிறுவனத்தின் ‘A- (lka)’ காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் ஆதரவுடன், புத்தாக்கம் மற்றும் சிறந்த கவனிப்பு மூலம் பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNBGI உறுதி பூண்டுள்ளது.