625
நல்லதண்ணி பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு (17)சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ரூ. 1,000 போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ரூ. 1,000 நாணயத்தாள்கள் 11, ரூ. 500 நாணயத்தாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை இன்றையதினம் (18) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துளளனர்.