Home » எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளமான புத்தாண்டின் விடியல்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளமான புத்தாண்டின் விடியல்

- பிரதமர் தினேஷ் குணவர்த்தன தைப்பொங்கல் வாழ்த்து

by damith
January 15, 2024 6:45 am 0 comment

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’, விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் விவசாயிகள், சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருவிழா தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாக அமையும்.

இது, தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு சிறந்ததோர் உந்து சக்தியாகும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுபீட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்த நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நாள்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT