Home » வட்டியில்லா கடன்: நீண்டகால கோரிக்கையை நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி

வட்டியில்லா கடன்: நீண்டகால கோரிக்கையை நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி

- சுமார் 1,200 மாணவர்கள் ரூ. 8 இலட்சத்தை பெறும் வாய்ப்பை இழப்பு

by Prashahini
January 11, 2024 12:46 pm 0 comment

நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருந்த உயர்தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை எதிர்க்கட்சியின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய மீண்டும் நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறோம், என்றாலும் Horizon மற்றும் Katsu International University (KIU) கல்வி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,200 மாணவர்களுக்கு இந்த வட்டியில்லா கடனாக ரூபா 8 இலட்சத்தை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வட்டியில்லாக் கடனைப் பெற்ற சில மாணவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதைக் கருத்திற் கொண்டு, இந்த மாணவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பது நியாயமற்ற செயல் என்றும், இது தொடர்பில் அரசாங்கம் தலையிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகங்களில் பதிவு செய்த பிறகு கடன் வசதி பறிக்கப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் கல்வி அமைச்சு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் குறித்த கல்வி நிறுவனங்களுக்கு இடையில் முத்தரப்பு கலந்துரையாடல் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x