Sunday, September 8, 2024
Home » தொலைபேசி இலக்கம் 109: எவ்வாறான குற்றங்கள் பற்றி முறைப்பாடு செய்யலாம்?

தொலைபேசி இலக்கம் 109: எவ்வாறான குற்றங்கள் பற்றி முறைப்பாடு செய்யலாம்?

- 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கம்

by Rizwan Segu Mohideen
January 5, 2024 9:18 am 0 comment

சிறுவர்‌ மற்றும்‌ பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்‌ வன்கொடுமைகள்‌ தொடர்பான முறைப்பாடுகளைப்‌ பெறுவதற்காக சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோகத்‌ தடுப்புப்‌ பணியகத்தில்‌ 24 மணிநேர விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான‌ நிகழ்வு பொதுமக்கள்‌ பாதுகாப்பு அமைச்சர்‌ டிரான்‌ அலஸ்‌ தலைமையில்‌, பதில்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ தேசபந்து தென்னகோனின் பங்களிப்புடன்‌ நேற்று (04) சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோக தடுப்புப்‌ பணியகத்தில்‌ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோகம்‌ தடுப்பு பணியகத்தில்‌ ஸ்தாபிக்கப்பட்ட இப்‌புதிய பிரிவானது Public Complain Desk எனும் பெயரில்‌ அழைக்கப்படுகின்றது.

109

011- 2444444

[email protected]

ஊடாக பொதுமக்கள் எளிதாகவும்‌ நேரடியாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும்‌.

இப்‌புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதன்‌ பிரதான நோக்கம்‌, சிறுவர்‌ மற்றும்‌ பெண்களுக்கு எதிரான குற்றங்களை, சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின்‌ ஊடாக தடுத்தல்‌ மற்றும்‌ சிறுவர்‌ மற்றும்‌ பெண்களுக்கு எதிரான பாலியல்‌ வன்முறைகள்‌, குடும்ப வன்முறைகள்‌, சிறுவர்கள்‌ பாதுகாப்பின்மை சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்‌ மற்றும்‌ கொடுமைப்படுத்தல்‌, சமூக வலைத்தளத்தினூடாக ஏற்படும்‌ குற்றங்கள்‌ தொடர்பான முறைப்பாடுகள்‌ முறையாக விசாரணை செய்யாமை, சட்டபூர்வ பாதுகாவலர்களினூடாக சிறுவர்களுக்கு ஏற்படும்‌ குற்றங்கள்‌ மற்றும்‌ பல்வேறு தடைகள்‌ காரணமாக பொலிஸ்‌ நிலையங்களுக்கு நேரடியாகச்‌ சென்று முறைப்பாடுகளை அளிக்க முடியாமை உள்ளிடட முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

சிறுவர்களின்‌ தனியுரிமை பாதுகாக்கும்‌ வகையில், குறித்த மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ அவசர அழைப்பு இலக்கத்தின்‌ ஊடாக முறைப்பாடுகளை வழங்க வாய்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும்‌ முறைப்பாடுகள்‌ சம்பந்தாக 24 மணிநேரமும்‌ இப்பிரிவு செயல்படும்‌. சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ ஏனைய நிறுவனங்களுடன்‌ ஒருங்கிணைந்து 24 மணி நேரமும்‌ இப்‌பிரிவு செயல்படுவதுடன்‌, தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்த பின்னர்‌, முறைப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அறிந்துகொள்வதற்காக பிரதேச பொலிஸ்‌ நிலையத்தின்‌ ஊடாக உடனடியாக முறைப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்‌புதிய விசேட பிரிவின்‌ திறப்பு விழாவிற்கு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின்‌ செயலாளர்‌ பி.வி. குணதிலக்க, தேசிய சிறுவர்‌ பாதுகாப்பு அதிகார சபையின்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ உதய குமார அமரசிங்க, நிபுணத்துவ சட்ட வைத்‌திய அதிகாரி பேராசிரியர்‌ கலாநிதி அனுருத்‌திகா எதிரிசிங்க, சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ சமூக வலுவூட்டல்‌ அமைச்சின்‌ மேலதிக செயலாளர்‌ நில்மினி ஹேரத்‌, சட்டமா அதிபர்‌ திணைக்களத்தின்‌ பிரதி சொலிசிட்டர்‌ ஜெனரல்‌ மகேஷிகா டி சில்வா குற்ற மற்றும்‌ போக்குவரத்து பிரதிப்‌ பொலிஸ்‌ மா அஇபர்‌ பிரியந்த வீரசூரிய, சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோகத்‌ தடுப்புப்‌ பணியகத்‌திற்குப்‌ பொறுப்பான பிரதிப்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ ரேணுகா ஜயசுந்தர உள்ளிட்ட முக்கியஸ்தர்களும்‌ கலந்துகொண்டனர்‌.

யுக்திய தேடுதல்: 0718598800 தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x