பொருளாதாரத்தையும் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக அமைச்சில் இன்று (01) நடைபெற்ற உறுதிமொழி வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ்வருடத்திலும் அமைச்சின் பணிகளை முன்னைய ஆண்டைப் போன்று மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிகாரிகளிடமும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வருடத்தில் அமைச்சின் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நாட்டிலேயே வெற்றிகரமான அமைச்சாக மாற முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் பலனாக இந்த வருடத்தையும் மிகவும் வெற்றிகரமான ஆண்டாக மாற்ற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.