– புதிய அட்டவணை வெளியீடு
நாளை, 2024 ஜனவரி 01 முதல் கரையோர வழியிலான புகையிரத சேவை நேர அட்டவணையில் புகையிரத திணைக்களம் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் ருஹுணு குமாரி கடுகதி புகையிரதம், அதிகாலை 5.25 மணிக்கு பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.
வார நாட்களில் மட்டும் இயங்கும் சாகரிகா கடுகதி புகையிரதம், பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமையும் இயக்கப்படவுள்ளது.
வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை இயங்கும் புகையிரதம் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன். பி.ப. 2.00 மணிக்கு மருதானையில் இருந்து அளுத்கம வரை செலுத்தப்படும் புகையிரதம் 2024 ஜனரி 01 முதல் பி.ப. 1.55 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படவுள்ளது.