Home » 2023 இன் அனைத்துக் கொடுப்பனவுகளுக்குமான நிதி திறைசேரியினால் விடுவிக்கப்பட்டது

2023 இன் அனைத்துக் கொடுப்பனவுகளுக்குமான நிதி திறைசேரியினால் விடுவிக்கப்பட்டது

- கடந்த 25 வருடங்களில் இதுவே முதன்முறை

by Rizwan Segu Mohideen
December 29, 2023 5:46 pm 0 comment

– ஓய்வூதியக் கொடுப்பனவுகள், நிலுவைத் தொகைகளும் உள்ளடக்கம்

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2023 டிசம்பர் 15 வரை அனைத்து அரச நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதியை விடுவிக்க திறைசேரி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 25 வருடங்களில், ஒரு வருடத்திற்குள் குறித்த ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அமைகின்றது.

அத்துடன், 2022 டிசம்பர் முதல், 2023 டிசம்பர் 19 வரை ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியப் பணிக்கொடைக்கான நிதி முறையாக வழங்கப்படுவதை திறைசேரி உறுதி செய்துள்ளது.

2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் 19 வரை ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை முறையாக செலுத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி விடுவித்துள்ளது.

மேற்படி காலத்தில், 18 மாதங்களுக்கும் மேலாக ஒன்று சேர்த்து வழங்க வேண்டியிருந்த ஓய்வூதிய நிலுவைத் தொகையும் உள்ளடங்குவதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x