அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை இன்று (22) ஆரம்பமாகின்றது.
இன்று ஆரம்பமாகும் பாடசாலை விடுமுறை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி நிடைவடைகின்றது.
இந்த பாடசாலை விடுமுறை 40 நாட்களைக் கொண்டதாக அமைகின்றது.
அந்த வகையில் பாடசாலைகளின் 3ஆம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் 2024 ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, பாடசாலை 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024 பெப்ரவரி 01ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
A/L பரீட்சை அனுமதி அட்டை திருத்தத்திற்கு டிசம்பர் 22 வரை அவகாசம்!
A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்: விண்ணப்ப முடிவு டிசம்பர் 22