724
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சுகததாச அரங்கில் இடம்பெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கட்சியின் தலைமைத்துவத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ன்ஸ்டன் பெனாண்டோ வழிமொழிந்தார்.