Tuesday, June 18, 2024
Home » 2024 பட்ஜெட் உள்ளிட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

2024 பட்ஜெட் உள்ளிட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

- பட்ஜெட், VAT, நிதிச் சட்டமூலம் ஆகிய 3 சட்டமூலங்களும் உடன் அமுல்

by Rizwan Segu Mohideen
December 13, 2023 7:48 pm 0 comment

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் இன்று (13) சான்றுரைப்படுத்தினார்.

அதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும் 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் இன்று (13) முதல் அமுலுக்கு வருகின்றன.

2024 பட்ஜெட் 41 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

VAT திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT