Friday, June 21, 2024
Home » விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன புதிய தலைவர் கடமை பொறுப்பேற்பு

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன புதிய தலைவர் கடமை பொறுப்பேற்பு

- 1987 இல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்

by Rizwan Segu Mohideen
December 12, 2023 4:19 pm 0 comment

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) தனியார் நிறுவனத்தின் புதிய தலைவராக, பொறியியலாளர் அத்துல கல்கெட்டிய தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்றையதினம் (11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

1987 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்ற அத்துல கல்கெட்டிய, 1991 ஆம் ஆண்டு முதல் இலங்கை பொறியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராகவும், பட்டய பொறியாளராகவும் இருந்து வருகின்றார்.

பொறியியல் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் 34 வருடங்களுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த பொறியியல் நிபுணரான அவர், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பொறியியல் கட்டுமானத் துறையில் பல்வேறு பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT