Tuesday, October 15, 2024
Home » மலேசியா சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மாணவன் ருஷாந் சாதனை

மலேசியா சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மாணவன் ருஷாந் சாதனை

by Rizwan Segu Mohideen
December 6, 2023 2:24 pm 0 comment

மலேசியாவில் இடம்பெற்ற, 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும் இவர், இலங்கை சார்பில் கலந்து கொண்டு Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் என்பது பாராட்டுக்குரியது.

2023ம் ஆண்டு டிசம்பர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்ந்த 2,500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதில் கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகியோர் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடத்தை தமதாக்கிக் கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x