காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் காபன் நடுநிலையைப் பேணுவதற்கும் பூட்டானின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், பூட்டான் கூடமொன்று ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள எக்ஸ்போ சிட்டியில் நடந்த COP28 மாநாட்டில் தொடங்கப்பட்டது.
இதேபோல், COP28 இன் தொடக்கக் கூட்டத்தில், பூட்டான் கிர்கிஸ்தானுடன் இணைந்து, மலைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தொழில்நுட்ப உரையாடலை நடத்தியது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட ‘இழப்பு மற்றும் சேதம்’தொடர்பான நிதியத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது விசேட அம்சமாகும்.
‘காபன் நடுநிலையை நிலைநிறுத்துதல்’ என்ற கருப்பொருளான கொண்டு இந்த கூடம் ஆரம்பிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பூட்டானின் முயற்சிகளையும், காபன் சந்தைகள் போன்ற புதிய வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் காண்பிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.
பூட்டான் கூடத்தில் நீர் மற்றும் உணவு பாதுகாப்பு முதல் காலநிலை நிதி மற்றும் எரிசக்தி துறையின் பல்வகைப்படுத்தல் உள்ளிட்ட 40 நிகழ்வுகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்படுகிறது.
COP28 இன் தொடக்கக் கூட்டத்தில் மலைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஒரு உரையாடலை இந்த மாநாட்டில் தொடங்குவதற்கு பூட்டான் ஆதரவு தெரிவித்திருந்தது.
வலுவற்ற மலைகளின் கட்டமைப்புகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளன என்று பூட்டானின் COP28க்கான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கர்மா ட்ஷெரிங் இங்கு சுட்டிக் காட்டினார். இமய மலை சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில் மாறிவரும் தட்பவெப்பநிலை காரணமாக மீளமுடியாத சேதங்களுக்கு முகங்கொடுப்பதை நாம் ஏற்கனவே கண்டு கொண்டோம். இதனால் நாம் கடுமையான அச்சத்தில் வாழ்கிறோம் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேபோல், காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு நிதி வழங்கும் நிதிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது விசேட அம்சமாகும்.
நிதியம் அமைக்கும் ஒப்புதலுக்குப் பிறகு, சுமார் USD 250 மில்லியன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. இந்த நிதிக்கு USD 100 மில்லியன் வழங்க டுபாய் முன்வந்த்தோடு ஜெர்மனி மேலும் 100 மில்லியன் வழங்க உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.