614
நுவரெலியா ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அண்மையில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் குறித்த வீதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வீதி தாழிறங்கியுள்ளது.
குறித்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதால் வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்