Wednesday, February 28, 2024
Home » ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் ஆறாமிடம்

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் ஆறாமிடம்

கிழக்கு மாகாண ஆளுநர் பாராட்டு -

by damith
December 4, 2023 10:47 am 0 comment

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ், இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவின் பிரகாரம், தேசிய ரீதியில் ஆறாம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுத் தெரிவித்தார். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடிய ஆளுநர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாணவியின் வேண்டுகோளின் பேரில், பல நாட்களாக நிலுவையிலிருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்கவும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT