நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியின் கிரிவன்எலிய, பத்தனை பிரதான வீதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (04) காலை 10.30 மணி அளவில் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பாதையின் ஊடாக பயணிக்கும் போது, சரிவான பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.