Home » டிசம்பர் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை; நிறுவனங்கள் அறிவிப்பு

டிசம்பர் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை; நிறுவனங்கள் அறிவிப்பு

- விலை அதிகரிக்க வேண்டிய போதிலும் பண்டிகை காரணமாக சலுகை

by Rizwan Segu Mohideen
December 2, 2023 2:07 pm 0 comment

இம்மாதம் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களி விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச அளவில் விலையேற்றம் மற்றும் டொலரின் விலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க வேண்டிய போதிலும் பண்டிகைக் காலம் என்பதால், அதனை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதே போன்றே, தமது நிறுவனமும் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக, லாஃப்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் கீழ் சமையல் எரிவாயுக்களில் இம்மாதம் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)

  • 12.5kg: ரூ. 3470 இலிருந்து ரூ. 3,565 ஆக ரூ. 95 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1393 இலிருந்து ரூ. 1,431 ஆக ரூ. 38 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 650 இலிருந்து ரூ. 668 ஆக ரூ. 18 இனால் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT