Monday, July 22, 2024
Home » டி20 உலகக் கிண்ணத்திற்கு நமீபிய அணி முன்னேற்றம்

டி20 உலகக் கிண்ணத்திற்கு நமீபிய அணி முன்னேற்றம்

by sachintha
November 30, 2023 8:14 pm 0 comment

டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து முதல் அணியாக நமீபியா தெரிவாகியுள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்திற்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நேற்று முன்தினம் நடந்த தன்சானியாவுக்கு எதிரான போட்டியில் 58 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலமே அந்த அணி தொடர்ச்சியாக முன்றாவது முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றுள்ள நமீபியாவில் நடைபெறும் இந்த உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நமீபிய அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியீட்டி முதல் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கிண்ணத்திற்கு 19 அணிகள் தகுதிபெற்ற நிலையில், ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து இன்னும் ஓர் அணி தகுதிபெற வேண்டியுள்ளது. உகண்டா, கென்யா, சிம்பாப்வே, நைஜீரியா ஆகிய அணிகள் அந்த ஓர் இடத்துக்காகப் போட்டியிடுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT