மாத்தறை மிரிஸ்ஸ நீர் வழங்கல் திட்டத்திற்குட்பட்ட பிரவுண்ஸ் ஹீல் நீர்த்தேக்கத்தில் அத்தியவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை மறுதினம் (26) மு.ப. 10 மணி முதல் பி.ப. 6.00 மணி வரையிலான 8 மணிநேர நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கோட்டை, கொட்டுவேகொட, பள்ளிமுல்ல, மெத்தவத்த, பிரவுண்ஸ் ஹீல்ஸ், ஹுன்னங்கொட ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
பேருவளை பி.எம். முக்தார்