1.3K
அனுராதபுரம் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் தலைமையக பொலிஸார் இன்று (24) கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் புளியங்குளம் பகுதியில் நடாத்திச் செல்லப்படும் தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்