639
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (22) காலை 7.00 மணி முதல் 26 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.
சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் இன்று (22) மாலை 7.00 மணியளவில் குறித்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு காசாளர்கள் பணிக்கு வந்ததை அடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.