Wednesday, November 13, 2024
Home » கொடையாக பெற்றதைக் கொடையாக கொடுப்போம்

கொடையாக பெற்றதைக் கொடையாக கொடுப்போம்

திருத்தந்தை பிரான்சிஸ்

by damith
November 21, 2023 11:33 am 0 comment

இறைவனிடமிருந்து அன்பைப் பரிசாக கொடையாகப் பெற்றுள்ள நாம் அதனை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்க அழைக்கப்படுகிறோம் என்றும், நம்மைப் பாதுகாத்த இயேசுவின் அன்பு, நம் காயங்களை ஆற்றிய அவரது இரக்கம் மற்றும் மகிழ்ச்சி, நம் இதயங்களைத் திறந்த தூய ஆவியின் ஒளி ஆகியவை இறைவன் நமக்கு அளிக்கும் கொடைகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 19 கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறன்று ஏழாவது உலக வறியோர் தினத்தை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருப்பலி மறையுரையின்போதே திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

வீட்டுத்தலைவரின் பயணமானது இயேசுவின் மறைபொருள், கடவுள் மனிதனைப் படைத்தது இயேசுவின் உயிர்ப்பு, விண்ணகத்திற்கு எழுந்து செல்லுதல் போன்றவற்றை சிந்திக்க வைக்கின்றது என்றும், தந்தையிடமிருந்து வந்து மனித குலத்தை சந்திக்க வந்தவர் மரணத்தை வென்று மீண்டும் தந்தையிடமே திரும்பினார் என்றும் எடுத்துரைத்தார்.

.மனித நேயத்தோடு நம்மை ஏற்றுக்கொண்ட இயேசு நல்ல சமாரியன் போல நம் காயங்களை ஆற்றினார், இறைமனித வாழ்வால் நம்மை வளப்படுத்த ஏழையானார், சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம்மைச் சுற்றிலும் கடவுளின் அன்பைப் பெருக்காவிட்டால் நமது வாழ்க்கை மிகவும் இருளில் மூழ்கிவிடும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், வறுமை ஒரு ஊழல், இறைவன் திரும்பி வரும் நாளின் போது நம்மிடம் கணக்குக் கேட்பார் என்றும் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அருளின்படியும் இறைவன் நம்மிடம் ஒப்படைத்த பணியின்படியும், தான தர்மங்களைப் பெருக்குவதற்கும், ஏழைகளுடன் நெருங்கிப் பழகுவதற்கும் நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்ள செபிப்போம் என்றும் இதனால் இறுதி நாளில் நன்று நன்று நம்பிக்கையுள்ள நல்ல பணியாளரே உம் தலைவரின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் என்று இயேசு கூறுவதைக் கேட்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

மெரினா ராஜ் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT