அனைத்துக்கும் மேலாக மனிதநேயத்துக்கு மதிப்பளிக்கும் மனிதர்களாக சகல பேதங்களையும் மறந்து சகோதரத்துவமுடனும் அந்நியோன்ய புரிந்துணர்வோடும் ஒருவருக்கொருவர் கடமைகளை நிறைவேற்றும் மக்கள் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் ‘நமக்கு நாம் மட்டுமே’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயற்படும் நல்லிணக்க மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப அமர்வு அண்மையில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்கள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தலைமையில் பிரதம அதிதிகள் பலரின் பங்கேற்புடன் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
உன்னதமான மனிதநேயத்துடன் கூடிய மனிதாபமான குணாம்சங்களை பாதுகாத்து பொதுநல நோக்கோடு செயல்படும் அவைரினதும் ஒத்துழைப்பைப் பெற்று எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களின் மேற்படி ஆரம்ப அமர்வில் பங்குபற்றிய ஆலீம் அஷ் ஷேக் அம்ஹர் ஹகம் தீன், உவிஷ்வ ஆனந்த சிவ குருகுலமின் செயலாளர், மக்கள் சங்கத்தின் உபதலைவர்/ தத்துவம் தொடர்பான போதகர் சிவா ஸ்ரீ சிவா, இந்து தத்துவஞானி ஷர்மா குருக்கள், இலங்கை மெதடிஸ்த சபையின் போதகர் அருட்தந்தை அனுர பேரேரா மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுர மற்றும் ராமஞ்ஞ நிகாயவின் முன்னாள் தலைமை ஆசிரியர், ரஷ்ய மொழி விரிவுரையாளர், இலங்கை_ ரஷ்ய நட்புறவு சங்கத்தின் தலைவர் பூஜ்ய பல்லேகந்தே ரதனசார தேரர் உள்ளிட்ட சர்வமத பிரதிநிதிகளும் இந்த நல்லிணக்க நிகழ்ச்சியின் தற்கால முக்கியத்துவம் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தனர்.
என்ற ஒரே உணர்வோடு ஒன்றிணைந்து நாம் எல்லோரும் செயற்பட வேண்டும்” என்று அனைத்துமதப் பிரதிநிதிகளும் கருத்து வெளியிட்டனர்.
எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மனப்பாங்குகள் மற்றும் விழுமியங்கள் தொடர்பாக ஒவ்வொருவருக்கிடையிலும் எந்தளவு முரண்பாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படுவது மிக முக்கியமானது. உன்னதமான மனிதநேயத்துடனும் மனிதாபிமானத்துடனும் நாம் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மனிதாபிமனத்துடனும் சகோதரத்துவத்துடனும் உணர்வு பூர்வமாக இணைந்துள்ள மக்களால் எந்தவொரு சவாலையும் வெற்றி கொள்ள முடியும். துன்பங்கள், துயரங்கள், நோய்கள், விபத்துகள் ஏற்படும் போது எமக்கு கைகொடுப்பது எம்முடன் இருக்கும் சகோதர மக்களே. அச்சந்தர்ப்பத்தின் போது மனிதநேயம் என்ற உயர்ந்த குணத்தையே நாம் காண்கிறோம். இவ்விதமாக நாம் செயலாற்றும் போது ‘எப்பொழுதுமே நமக்கு நாம் மட்டுமே’ என்ற சொற்றொடர் முழு இலங்கை மக்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது.
இக்கருத்தை அனைத்து மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் ‘நமக்கு நாம் மட்டுமே’ என்ற கருத்தாக்கத்தை இந்நிகழ்ச்சியின் ஆரம்ப செய்தியாக நாம் உள்வாங்கியிருக்கிறோம். அந்நியோன்னிய புரிந்துணர்வு, நட்புணர்வு, கௌரவத்துடன் கூடிய மனிதாபிமான உணர்வோடு நீண்ட காலம் ஒற்றுமையுடன் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்கள் குழுக்களினதும் தேவைகளை அறிந்து நட்புணர்வு மேலும் அதிகரிக்க முயற்சி செய்யும் மக்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் உண்மையான சகோதரத்துவத்துடனேயே இணைந்து செயல்படுகிறார்கள். தம்மோடு வாழும் சகல சகோதர மக்கள் குழுக்களுக்காக அவர்களின் தேவைகளை கண்டுகொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதும் ‘ நமக்கு நாம் மட்டுமே’ என்ற கருத்தாக்த்தை உள்வாங்கியமையே காரணமாகும்.
நல்லிணக்கத்தின் மனிதாபிமான நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப அமர்வில் பங்கேற்க முடிந்தமையிட்டு உண்மையிலேயே தாம் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.