Wednesday, October 9, 2024
Home » திருக்கோவிலில் களைகட்டிய சூரசம்ஹாரம்

திருக்கோவிலில் களைகட்டிய சூரசம்ஹாரம்

by Prashahini
November 20, 2023 8:50 am 0 comment

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹார நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று முன்தினம் (18) மாலை சிறப்பாக நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் உதவியோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான பரிபாலன சபையினர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆலய சுற்று வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சுமார் மூன்று மணி நேரம் கடும் சமர் இடம்பெற்றது.

அச்சமயம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து நேற்று (19) திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விரதம் நிறைவு பெறுகிறது.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x