Sunday, May 26, 2024
Home » தொலைபேசி காதல்; காணாமல் போன 14 வயது சிறுமி மீட்பு

தொலைபேசி காதல்; காணாமல் போன 14 வயது சிறுமி மீட்பு

- வவுனியாவில் சம்பவம்; 18 வயது இளைஞர் கைது

by Rizwan Segu Mohideen
November 11, 2023 1:19 pm 0 comment

14 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் சென்ற நிலையில் வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (10) மீட்கப்பட்டதுடன், உடனிருந்த 18 வயது இளைஞன் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை காணவில்லை என கடந்த நவம்பர் 03ஆம் திகதி, குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளத்திலும் சிறுமியின் புகைப்படத்தினை பிரசுரித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (10) மதியம் அச்சிறுமி வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞருடன் தங்கிருந்தமையினை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவையாளருடன் பொதுமக்கள், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த வீட்டுக்கு சென்று சிறுமியை மீட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும், அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா விசேட நிருபர்

குறிப்பு: பெற்றோர் தமது பிள்ளைகளை எப்போதும் அவதானத்துடன் கண்காணிப்பது அவசியமாகும். அதனை மாத்திரம் மேற்கொள்வதால் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியாது. தமது பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குதல், அவர்களுக்குள்ள பிரச்சினைகள் கேட்டறிதல், அவர்களுக்கு தேவையான, அவசியமான விடயங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்டவை மூலம் அவர்களுடன் அன்பாகவும், நெருக்கமாகவும் இருப்பதன் மூலம் இவ்வாறான விடயங்களை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT